Monday, 19 December 2011

அன்னையும் தோழி ஆவாள்..
என்னுடன் தொலைக்காட்சி remoter ku சண்டை இடுகையில் ...

Tuesday, 13 December 2011

nilavum



நிலவும் நதியில் விழுந்து கல் அடி வாங்கும் ...
அதுவும் தனிமையில் இருந்தால் ..

பிடித்தது ...

தனிமை உணராத பொழுது ,
பிரிவு இல்லா  நட்பு ,
வெறுமை வராத உழைப்பு ,
மொழி அறியா புன்னகை ,
காயம் இல்லா ஊடல் ,
மௌனம் இடையூராத  பேச்சு ,
இமை திறக்காத கனவு ,
விழி மறைக்காத காட்சி ,
நகக் கடி இல்லா பந்தயம் ..
கண்ணீர் அறியா கவலை..
தலைகனம் எட்டாத பாராட்டு..
வன் சொல் உதிர்க்காத இதழ் ..
எறும்பு உண்ணாத வெல்ல பாகை  ...
இடி கொட்டாத வானம் ..
 
 

Wednesday, 7 December 2011

அனைக்க அன்னை இருந்தும் அரவணைக்க தந்தை இருந்தும் அனாதையாக உணர்ந்த தளிர் மனதின் கண்ணீர்கள் ....



  தலை கனத்து விட  கூடாதென்று என் நிறைகளை நெஞ்சில் தக்கவைத்து குறைகளை உரைத்த என் தந்தைக்கு
  என்னுள்  தலை கனத்துடன் தன்னம்பிக்கையும் கரைந்து போனதை அறிய இயலவில்லை ...

     வெளிச்சம் அதிகம் கிடைத்தால் எங்கே நான் அல்லி பூவை போல் வாடிருவேன் என்று தன் அன்பு ஒளியை என்னிடம் காட்ட மறுத்த அன்னைக்கு
    நான் அல்லி பூ அல்ல அவள் ஒளியை ஏங்கி வாழ நினைக்கும் சூர்யகாந்தி பூ என்று அறிய இயலவில்லை ...


Tuesday, 6 December 2011

புரிஞ்சுக்கவே முடியல ...

கவிதைகளால் அந்த கள் அழகரை கவர்ந்து காதல் வைத்து கணவராக்கிய ஆண்டாள் ...
மீன் விழியால் சொக்கனை சொக்கவைத்து சொந்தமாக்கிய மீனாக்ஷி ...
இவர்கள் எல்லாம் அவள் வீட்டின் பூஜை அறையில்
ஆனால் மணம் முடிக்க மணவாளனை தனிச்சையாக தேர்ந்தெடுத்த அவளோ அவள் வீட்டு வாசலில் ....


Monday, 5 December 2011

என்னவள்

என் முற்று புள்ளியின் அருகில்
ஓர் ஒற்றை புள்ளியாய்  ..

என் வானில் மிதந்து மறையும் மேகங்களின்  நடுவே
மறையாமல்  நிலையாய் இருக்கும் ஓர் நிலாவாய்..

தனிமையின் தண்டனையில் இருந்து
என்னை மீட்டவள் ..

Wednesday, 30 November 2011

மீண்டும் ஒரு தோல்வி ..

என் உள்ளங்கையில் முகம் புதைத்து
மாற்றார் கண் பார்வையிலுருந்து மறைத்து 
என் விழி வழியே வடியும் கண்ணீர் துளிகளோடு
என் தோல்வியின் வலியையும் வழியனுப்ப முயன்றேன் ...
சந்தித்தேன் இதில் மீண்டும் ஒரு தோல்வி ....

Tuesday, 29 November 2011

என் உயிர் தோழிக்கு ...

கல்லூரியின் இறுதி ஆண்டில் ....

       நீ தேர்ந்தெடுத்த பாடத்தை நான் எடுக்காதபொழுது
        உனக்கும் எனக்கும் ஏதோ மனஸ்தாபமா என்று நம்மிடம் துக்கம் விசாரித்தவர்கள் பலர்..

ஒரே அலுவலகத்தில் பணியில் இருக்கையில் ...

    நீயும் நானும் அரிதாய் பேசுவதை கண்டு
    உனக்கும் எனக்கும் நட்பு புதிது என்று எண்ணியவர்கள் உண்டு ...

ஆனால் நாம் அனுதினமும் மௌனத்தின் வழியே நட்பை பரிமாரிக்கொள்ளும்  உயிர் தோழிகள் என்று
உன்னையும் என்னையும் தவிர வேறொருவரும்
 அறிந்ததில்லை ..

Monday, 28 November 2011

இரவு ..



 இரு விழிகளின் இமைகளை  அணைத்து..
பகலில் கண்ட காட்சிகளை
சிறை பிடிக்கும் பொழுது ..


உலகத்தின் மேல் உன் கார்கூந்தல் எடுத்த  படை எடுப்பு ..

 என்னவளின் இமை ஓர மை யின் ஒரு துளி  சிந்தல் ....

கோபம்..

தனிமையில் கண்கள்  வழியே கண்ணீர் துளிகளாய் ....
சபையில் மொழியின் வழியே கடும்சொர்களாய்...
உன்னை ஒளித்துவைக்க எனக்குள் ஓர் இடம்  இல்லாத ஓர் ஏழை நான் ...

Friday, 25 November 2011

பெயர் பலகை ....

நான்கு வருட படிப்பை  விலை கொடுத்து ...
என் அலுவலகத்தில் என் அறைக்கு என் பெயரை பச்சைக்குத்திக்கொண்டேன்

Thursday, 24 November 2011

கல்லூரியின் முதல் நட்பும் முதல் பகையும் part 1..தொடர்ச்சி ......


எதற்கும் அஞ்சாமல் ,வரது வரட்டும் வந்ததும் பார்த்துக்கலாம்.,அவளது முகத்தில் ஒரு வித சலனமும் இல்லாமல் சுதந்திரமாக பறக்கும் ஒரு பட்டாம்பூச்சியை போல் இருப்பவள் காவ்யா...

  அவளது கைபேசி தொலைந்தாலும் 10  நிமிடங்களை கடந்து அவள் அதற்கு வருத்தபடமாட்டாள் மாறாக அடுத்து வாங்கும் கைபேசியை பத்திரபடுத்த எண்ணுவாள் ...

     
ஆனால் காவ்யாவிடம் ச்நேஹம் கொள்வதற்கு முன் யாராலும் இதை அறிய இயலாது ....

    வீட்டை பிரிந்து,அவள் ஊரை பிரிந்து வந்ததால் ஏனோ அவளுக்கு வெறுப்பு... அவள் தலைமுடி எண்ணையை வெறுக்கும் ,கண்கள் கண்மையை  கூட வெறுக்கும் ஆனாலும் அவளின் இளவரசி நடை எல்லாரையும்  கவர்ந்திலுக்கும்..

 அவளிடம் தன் முதல் நட்பு வளர்ந்ததில் கீர்த்திக்கு எல்லையற்ற ஆனந்தம் என்றும் உண்டு ..

     எதிலும் முழுமையை எதிர்பார்த்து செய்பவள் நேஹா..விருப்பம் இல்லை என்றாலும்  ஒரு முறை இரு முறை புலம்பினாலும் அதை திறம்பட செய்து முடித்திருவாள்  ... அவள்  அப்பாவின் வார்த்தைகள் அவளுக்கு சில நேரம் எரிச்சலடைய செய்தாலும் அதை பின்பற்றுவாள்...

கல்லூரியின் முதல் பகையும் முதல் நட்பும் .....

சஞ்சயின் நண்பர்களுக்கு அவனின்  வீட்டில் இருந்து பல முறை அழைப்பு வந்தது.. எல்லாரும் பதற்றம் அடைய தொடங்கினர்...பின்பு எப்படியோ சஞ்சய் யை தொடர்பு கொண்டு வீட்டிற்கு உடனடியாக வர சொன்னாள் அவனது அன்னை..அவன் வீட்டிற்கு வந்ததும் அவசரமாக T.C.E பொறியியல் கல்லூரிக்கு கிளம்ப சொன்னாள் ,அவனது தங்கை அதற்கு முன்பே கிளம்பி அங்கும் இங்கும் ஓடிகொண்டிருண்டாள். "உன்   பெரியப்பா இப்போதான் call பன்னார் கீர்த்திக்கும் நம்ம கல்பனாக்கு கிடைச்ச college லையே seat கிடைச்சுரும் போல இருக்கு அதனால நீங்க எல்லாரும் கிளம்பி இருங்க.. நாங்க அங்க வந்ததும்  நம்ம சேர்ந்துபோகலாம்நு  சொன்னார் " அவனது அம்மா கூறிகொண்டிருபதை தலை வாரிக்கொண்டு கேட்டுகொண்டிருண்டன்..
   
     அதற்கிடையில் அவனது நண்பர்கள் அழைத்து என்ன விஷயம் எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுகொண்டிருண்டனர்..அவனும் என் தங்கையை கல்லூரிக்கு அழைத்து செல்ல அவனை அழைத்ததாக கூறிகொண்டிருந்தான்....

   அடுத்த 5 நிமிடங்களில் அனைவரும் கிளம்பியிருந்தனர்..சஞ்சயின் தந்தை வெளி ஊரில் இருப்பதால் சஞ்சய் தான் அக்குடும்பத்தின் தலைவனை போல் எல்லா பொறுப்புகளையும் கவனிப்பான்....  கீர்த்திக்கு தான் பொறியியல் கல்லூரியில் சேருவதில் துளி நம்பிக்கை கூட இல்லை ... இருபினும் ஏதோ ஒரு எண்ணத்தில் கல்லூரிக்கு சென்றாள்..

   அவளின் நம்பிக்கைக்கு மாறாக அவளுக்கும் அதே கல்லூரியில் இடம் கிடைத்தாயிற்று.அதுவும் அன்றே அவள் வகுப்பை தொடரலாம் என்று கூறிவிட்டனர் ....

முதல் வருட வகுப்பு ஒரு வாரத்திருக்கு முன்பே தொடங்கிருந்தாலும் அவளுக்கு அதுதான் முதல் வகுப்பு ...

      பட பட என்று அவள் இதயம் துடிக்க ...... பனி மலையில் இருப்பதை  போன்று  அவளது உள்ளங்கை எல்லாம் சிலிர்த்துவிட்டது ...அவள் சுபாவமே அப்படிதான் எதற்கெடுத்தாலும் ஒரு சிறு அச்சம்.... அவளுக்கு நல்ல தோழி கிடைப்பார்களா ... அவளது பாடம் படிக்க இயலுமா..என்று ஒவ்வொரு கேள்வியும் விடை அறியாமல் அங்கும் இங்கும் அவள் மனதில் அலைந்துகொண்டிருந்தது அவள் அவளது வகுப்பிடம் தேடி அலைவதை போல ..எப்படியோ வகுப்பை கண்டுபிடித்துவிட்டால் ...

          "எல்லாரும் அவுங்க அவுங்க test paperah இங்க  submit பண்ணுங்க  time
ஆகிட்சு ..time up " மீனா  கூறிகொண்டிருந்தால் மாணவர்களை பார்த்து ...
"Excuse me mam ...may i come in .. " கீர்த்தியின் மெலிந்த குரலைக்கேட்டு அனைவரும் ஒருசேர அவளை பார்த்தார்கள் ...அவளுக்கோ அனைவரின் பார்வையும் ஏதோ துப்பாக்கியில் இருந்து பாய்ந்து வந்த தோட்டாவை போல் தோன்றியது ...

           "Are you a new student ?" மீனா கேட்டாள்.. "yes maam " கீர்த்தி பதில் அளித்தாள்..
"Ok !!! go and sit in first row "..

 அங்கு நான்கு நேர்வரிசையாக அதில் 6 நிறைகளாக  (4 rows 6 columns ) அமர்ந்திருந்தனர் ....அங்கு மாணவிகளே மாணவர்களை விட அதிகமாக இருந்ததால்.. மாணவர்கள் அமர்ந்திருந்த நிறைகளுக்கு (column) முன்னால் ஒரு bench il மட்டும் மாணவிகள் அமர்ந்திருந்தனர் ..ஒவ்வொரு benchilum 3 பேர் அமர்ந்திருந்தனர் ...

      கீர்த்தியும் போய் அமர்ந்தாள்...அவளது benchil நேஹா,காவ்யா இருவர் அமர்ந்திருந்தனர் ...அடுத்த வகுப்பு கணித பாடம் கீர்த்திகோ ஒன்றும் புரியவில்லை நேஹா விடம் கேட்டால் அவளோ "உனக்கு எந்த உதவியோ,சந்தேகமோ sir kita ketuko "என்று கூறிவிட்டாள்..."cha நான் பேசுன முதல் பிள்ளையே என்ன திட்டுது எப்படி தான் 4  வருடம் போகபோதோ " கீர்த்தி வருதப்பட்டுக்கொண்டாள்...

       அடுத்து வந்த நாள்களில் அவளுக்கு கல்லூரி செல்ல மனமில்லை இருந்தும் சென்றாள் ...

          பெண்ணுங்களுக்கு உரிய கூச்சம் அந்த 3 மாணவிகளுக்கும் இருந்தது... பசங்க இருக்கும் பக்கம் எப்படி அமராமல் தவிர்ப்பது என்று போட்டி இருக்கும் ..பாவம் கீர்த்தி தான் வழக்கம் போல் மாட்டிகொல்வாள் ...

       

Monday, 21 November 2011

vilai mathipatrathu...

அவன்  என்னை  பார்த்த  முதல்  பார்வை  ....

அவன் விரல் நுனி என்மீது பட்டதும் நான் உணர்ந்த ஸ்பரிஷம்..

அவனின் முதல் முத்தத்தின் ஈரம் ..

இவை அனைத்திற்கும் மேலாக

 அவன் என்னை  அம்மா என்ற சொல்லில் அழைக்கும் மழலை குரல் ....

thookam

அலுவலக நேரத்தில்...

     இமை திறந்து தூக்கத்தை துரத்த ...அது செல்ல மனமின்றி இமை இழுத்து மீண்டும் உள்ளே வர...

என்ன கொடுமை..

ஆனால் இரவிலோ நேர் எதிர்மறை ....

malaiyil theekulikiren..

அவளது அண்ணனின் தொலை பேசிற்கு அழைத்தாள்..அதே சிறுபிள்ளை குறும்போடு சண்டை போட்டுகொண்டிருந்தாள்,நான் அவளறியாமல் வழக்கம் போல் அங்கும் இங்கும் தூளி ஆடும் அவளின் இருவிழிகளையும் ரசித்து கொண்டிருந்தேன்.இன்று நினைத்தாலும் எல்லாம் மாயமாய் இருக்கிறது எப்படி நானும் அவளும் வாழ்வில் இணைந்தோம் என்று. அவள் எனது வகுப்பில் முதன்முதலாய் நுழைந்தது முதல்..
     
    அவள் செய்யும் குட்டி  சேட்டைகள்,சிறு குறும்புகள்  செய்து தோழிகளிடம் மாட்டிகொண்டு அவள் கொடுக்கும்  விளக்கங்கள் எல்லாம் என்னை அவளருகில் இருக்கும் ஆசையை தந்தது...

 நான் கடவுளுக்கு எத்தனை முறை நன்றி கூறியிருப்பேன் என்று எனக்கே தெரியாது அவள் ஒவ்வொரு தேர்வுக்கும் எனக்கு பின்னல் அமர்வதை நினைத்து.. நானும் எல்லாரையும் போல் தேர்விற்கு படிக்காமல் பக்கத்தில் அமர்ந்திருபவரின் விடைத்தாளை நம்பி வந்தேன்.எனது அதிர்ஷ்டமோ இல்லை அவளின் துரதிர்ஷ்டமோ என் முன்னால் அமர்பவன் விடுமுறையில் இருந்தான் .நானும் அவள்  விருப்பமின்றி அவளது விடைத்தாளை பறித்து விடை எழுதிகொண்டிருந்தேன்..அந்நேரம் பார்த்து எனது ஆசிரியரிடம் நான் மாட்டிகொண்டேன் பாவம் அவளும் என்னால் அன்று தண்டனை அனுபவித்தால் அனைவரின் முன்னிலையில் அவள் விட்ட  கண்ணீரை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை ..மழை துளியாய் சிந்திய அவளது கண்ணீரில் முதன் முதலை நான் தீக்குளிப்பதாய்   உணர்ந்தேன்  ....அன்று தான் ஏனோ அவளிடம் ஒரு மனம் புரியாத அன்பு தோன்றியது ..அடுத்து வந்த தேர்வில் நான் படிக்காமல் சென்றாலும் அவளிடம் விடைத்தாளை வாங்குவதை தவிர்த்தேன் பின்பு அவளுக்காக படிக்க ஆரம்பித்தேன்.. அன்று முடிவு செய்தேன் அவள் கண்களில் கண்ணீர் துளிக்கு விடுமுறை அளிக்க..அவளை கரம் பிடிக்க..

        ஆனால் இன்றும் என்னால் அவளது கண்ணீருக்கு விடுமுறை தர இயலவில்லை..அவளோடு நான்  வாழ்வது அவளது பிரியமான சொந்தங்களுக்கு ஏனோ  பிடிக்கவில்லை..காரணம் நானும் அவளும் காதல் திருமணம் செய்ததுதான்.. அதனால் சிறுபிள்ளை போல் மனமிற்கும் என்னவளை வார்த்தைகளால் துரத்தி மகிழ்வதே அவர்களது வாடிக்கை..

       தூளி ஆடிகொண்டிருந்த இருவிழிகளில்  கண்ணீர் துளி ஒட்டிகொல்வதும் ,நான் பார்க்கும் முன்பே அதை துரத்த  அவள் படும்பாடு .....

     மழைத்துளியாய் அவள் எனதருகில் இருந்தாலும் அவ்வபோது இன்றும் தீக்குளிக்கிறேன்..என்னவளின் சொந்தங்கள் நான் புரிந்த காதலுக்காக  அவளை காயபடுத்தும் பொழுது ...