Friday, 26 July 2013

டா வின்சியின் பெயருள்ள ஓவியமும் ..பல்லவனின் பெயரில்லா ஓவியமும் !!!!!!!! பெயருக்கு கிடைத்த வெளிச்சமோ ....(படித்ததில் பதிந்தது)

டா வின்சியின் பெயருள்ள ஓவியமும் ..பல்லவனின்  பெயரில்லா ஓவியமும் !!!!!!!!  பெயருக்கு கிடைத்த வெளிச்சமோ ...

வருத்தத்துக்கு உரிய ஒன்று....
.....
..





லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட "மோனாலிசா" என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா...ஓஹோ...இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும்,அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது,மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்,மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது,இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது,மோனாலிசா ஓவியமானது டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது,மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை, ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது ,மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது என்பன போன்று, இந்த ஒரே ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டே ஐரோப்பியர்கள் இவ்வளவு அளப்பரைகளை கொடுத்து எப்படியோ உலகப் புகழுக்கு இதை கொண்டு சென்று விட்டனர்.

செஞ்சி அருகே பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கம் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது!. இதை வரைந்தவன் அவன் பெயரை கூட விட்டுச் செல்லவில்லை!.ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரியுமா? கோயில் சுவரின் அதாவது பாறைகளின் மீது சுண்ணம் தீட்டி, அந்த சுண்ணத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த ஓவியத்தை தீட்டி முடித்தாக வேண்டும்!, இதோ முடித்து விட்டான் பாருங்கள் அந்த பல்லவ ஓவியன், இவ்வளவு குறிகிய நேரத்தில், இவ்வளவு நேர்த்தியாக இத்தனை நகை அலங்காரங்களோடு தீட்டி இருக்கும் இந்த ஓவியத்தை என்னவென்று கூறுவது? இந்த ஓவியத்தை நாம் அறியவேண்டுமென்றால் எவ்வளவு ஆராய வேண்டும், இப்படி கவனிப்பாரற்று கிடந்து, இவ்வளவு பழுதாகியும் எவ்வளவு பொலிவுடன் இருக்கின்றது இந்த ஓவியம்,அந்த சொக்கும் கண்கள் எதை நோக்குகின்றது, அந்த புன்னகை எதை குறிக்கின்றது ?கழுத்தில் இருக்கும் நகைகள், தலையில் இருக்கும் கிரிடம்,அடடா..விவரிக்க வார்த்தை இல்லையே.. எவ்வளவு கைதேர்ந்த ஆட்கள் நம்மிடம் இருந்திருந்தால் இது போன்றவற்றை நாம் சாதித்திருக்க முடியும்.

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

via Sasi Dharan



Wednesday, 14 March 2012

veetirku sellum ovoru muraiyum..

பெரியம்மா பாசமாய் பாயாசம்..
சித்தி எனக்கு பிடிக்கும் என பூரி ..
அம்மா பருப்பு சாதம்..
அண்ணா இனிப்புகள்..
அப்பா பழங்கள் ..
பாட்டி பலகாரங்கள் ..
ஆனால் எனக்கோ என் வீட்டின் அறையில் துக்கம் இல்லா குட்டி தூக்கம் ..
வீட்டிற்கு  செல்லும்  ஒவ்வொரு  முறையும் ..

Friday, 10 February 2012

கடற்கரையில் ஓர் பட்டம்

பட்டத்தை பிடித்து நீ துள்ளி ஓடுகையில் ..

உன் காலடி சின்னத்தோடு என் காலடியும் உறவாடும்..

உன் திசையில் என் பார்வையும்   கைகோர்க்கும் ...

வான் நோக்கிய உன் விழிகள் அறியாத   
உன்னைப்பற்றியே  கதைக்கும்  எனது கண் இமைகள் ...

அனைத்தும் காற்றில் இடறி விழும் பட்டத்தை ஏந்த அல்ல
உன்னை ஏந்த மட்டும் ...

Saturday, 21 January 2012

நான் ஒன்றும் சிவனோ விஷ்ணுவோ இல்லையே ..


வீதியில் இருப்போர்க்கு
அவர்கள்  எதிரே நான்
தோன்றினாள் அதிர்ஷ்டம்...
வாழ்த்தினாள் தெய்வ  வாக்கு...

 தல்லாடித்திரியும்  தடியர்களுக்கு
  ஓர் விளையாட்டு கை பொம்மையாய் ..
  ஓர்  நகைப்பு பொருளாய் ..  

 பெற்றவர்க்கு
  ஓர் துயரமான துக்கமாய் ..
  
என்னை ஓர் தோழியாய் அல்ல
ஓர் தோழனாய் அல்ல
அவர்கள் வீட்டில் இருக்கும் ஓர்  நாய் குட்டியாய்...
எண்ண ஓர் ஜீவன் இல்லா உலகத்தில்

என்னை அர்த்தநாரியாய் / மோக்கினியாய் பூஜிக்க
நான் ஒன்றும் சிவனோ விஷ்ணுவோ இல்லையே ..

 ஓர் அற்பமான  திருநங்கை தானே ...


 

Monday, 19 December 2011

அன்னையும் தோழி ஆவாள்..
என்னுடன் தொலைக்காட்சி remoter ku சண்டை இடுகையில் ...

Tuesday, 13 December 2011

nilavum



நிலவும் நதியில் விழுந்து கல் அடி வாங்கும் ...
அதுவும் தனிமையில் இருந்தால் ..

பிடித்தது ...

தனிமை உணராத பொழுது ,
பிரிவு இல்லா  நட்பு ,
வெறுமை வராத உழைப்பு ,
மொழி அறியா புன்னகை ,
காயம் இல்லா ஊடல் ,
மௌனம் இடையூராத  பேச்சு ,
இமை திறக்காத கனவு ,
விழி மறைக்காத காட்சி ,
நகக் கடி இல்லா பந்தயம் ..
கண்ணீர் அறியா கவலை..
தலைகனம் எட்டாத பாராட்டு..
வன் சொல் உதிர்க்காத இதழ் ..
எறும்பு உண்ணாத வெல்ல பாகை  ...
இடி கொட்டாத வானம் ..