எதற்கும் அஞ்சாமல் ,வரது வரட்டும் வந்ததும் பார்த்துக்கலாம்.,அவளது முகத்தில் ஒரு வித சலனமும் இல்லாமல் சுதந்திரமாக பறக்கும் ஒரு பட்டாம்பூச்சியை போல் இருப்பவள் காவ்யா...
அவளது கைபேசி தொலைந்தாலும் 10 நிமிடங்களை கடந்து அவள் அதற்கு வருத்தபடமாட்டாள் மாறாக அடுத்து வாங்கும் கைபேசியை பத்திரபடுத்த எண்ணுவாள் ...
ஆனால் காவ்யாவிடம் ச்நேஹம் கொள்வதற்கு முன் யாராலும் இதை அறிய இயலாது ....
வீட்டை பிரிந்து,அவள் ஊரை பிரிந்து வந்ததால் ஏனோ அவளுக்கு வெறுப்பு... அவள் தலைமுடி எண்ணையை வெறுக்கும் ,கண்கள் கண்மையை கூட வெறுக்கும் ஆனாலும் அவளின் இளவரசி நடை எல்லாரையும் கவர்ந்திலுக்கும்..
அவளிடம் தன் முதல் நட்பு வளர்ந்ததில் கீர்த்திக்கு எல்லையற்ற ஆனந்தம் என்றும் உண்டு ..
எதிலும் முழுமையை எதிர்பார்த்து செய்பவள் நேஹா..விருப்பம் இல்லை என்றாலும் ஒரு முறை இரு முறை புலம்பினாலும் அதை திறம்பட செய்து முடித்திருவாள் ... அவள் அப்பாவின் வார்த்தைகள் அவளுக்கு சில நேரம் எரிச்சலடைய செய்தாலும் அதை பின்பற்றுவாள்...