தனிமை உணராத பொழுது ,
பிரிவு இல்லா நட்பு ,
வெறுமை வராத உழைப்பு ,
மொழி அறியா புன்னகை ,
காயம் இல்லா ஊடல் ,
மௌனம் இடையூராத பேச்சு ,
இமை திறக்காத கனவு ,
விழி மறைக்காத காட்சி ,
நகக் கடி இல்லா பந்தயம் ..
கண்ணீர் அறியா கவலை..
தலைகனம் எட்டாத பாராட்டு..
வன் சொல் உதிர்க்காத இதழ் ..
எறும்பு உண்ணாத வெல்ல பாகை ...
இடி கொட்டாத வானம் ..
No comments:
Post a Comment