பட்டத்தை பிடித்து நீ துள்ளி ஓடுகையில் ..
உன் காலடி சின்னத்தோடு என் காலடியும் உறவாடும்..
உன் திசையில் என் பார்வையும் கைகோர்க்கும் ...
வான் நோக்கிய உன் விழிகள் அறியாத
உன்னைப்பற்றியே கதைக்கும் எனது கண் இமைகள் ...
அனைத்தும் காற்றில் இடறி விழும் பட்டத்தை ஏந்த அல்ல
உன்னை ஏந்த மட்டும் ...